பிசிசிஐ இன் இந்திய போட்டிகளுக்கு 2023-28 க்கான ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றும் நிறுவனம் எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 2023 முதல் 2028 வரை இந்திய கிரிக்கெட் அணியின் 88 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில், 25 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள், 27 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 36 டி20 கிரிக்கெட் போட்டிகளாகவும் நடைபெற உள்ளன.
ஏற்கனவே ஒளிபரப்பு உரிமம் பெற்று ஒளிபரப்பு செய்து வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமம் இன்னும் சில மாதங்களில் முடிவடையவுள்ளது.
எனவே புதிய ஒளிபரப்பு உரிமத்தின் அடிப்படையில் 2028 வரை ஒளிபரப்பு செய்யும் உரிமைக்கான ஏலம் கூடிய விரைவில் நடைபெறவுள்ளது
புதிய ஒளிபரப்பு உரிம ஏலமானது தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமங்களாக பிரித்து வழங்கப்படவுள்ளது
ஏற்கனவே ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமமானது 48,390 கோடிக்கு விற்பனையான நிலையில், பிசிசிஐ யின் இந்திய போட்டிகளுக்கான உரிமத்திற்கான மதிப்பு குறித்த எதிர்பார்ப்பு பெரிதும் கூடியுள்ளது.







