“சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” -தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!

சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.  சென்னை கோடம்பாக்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தென் சென்னை பாராளுமன்ற தொகுதி சைதாப்பேட்டை மற்றும் தியாகராய நகர் செயல்வீரர்கள்…

சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

சென்னை கோடம்பாக்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தென் சென்னை பாராளுமன்ற தொகுதி சைதாப்பேட்டை மற்றும் தியாகராய நகர் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது மேடையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், கலைஞரின் பேரன், மு.க. ஸ்டாலின் பையன் என்ற அடையாளம் இல்லாமல் தெரு முனையில் உதயநிதி ஸ்டாலின் நின்றால் அவர் யார் என்று மக்களுக்கு அடையாளம் தெரியாது.

இவர்கள் இந்தியாவைக் காப்பாற்றுவதாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பட்டியல் இன மக்களைப் பற்றிப் பேச இவர்களுக்கு அருகதை கிடையாது. இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படும் போது இலங்கைக்குச் சென்று நீங்கள் பார்த்தீர்களா, மணிப்பூருக்குப் பிரதமர் செல்லவில்லை என்று ஏன் கூறுகிறீர்கள்.

இன்று சரித்திரம் மாறியிருக்கிறது. நீங்கள் ஆணவத்துடன் பேசுகிறீர்கள். அவர்கள் செய்வதெல்லாம் கட்சிக்காக நாங்கள் செய்வதெல்லாம் மக்களுக்காக. எனவே ஒவ்வொரு ஓட்டும் நமக்கு முக்கியமானது. சூரியன் உதிக்கிறதோ இல்லையோ தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.