“கருத்துக்கணிப்புகள் மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கருத்துக்கணிப்புகள் மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நேற்று பிற்பகல் 2 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பரப்புரை தொடங்க ஆயத்தமானேன்.

ஓசூரில் தொடங்கி, சென்னை எண்ணூரில் இரவு 10 மணிக்கு பிரச்சாரத்தை நேற்று முடித்தேன்.

ஓசூர் முடித்து மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் ஆகிய தொகுதிகளில் சாலைகளில் மக்கள் வரவேற்பளிக்க சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு வீதி வீதியாக வாக்கு கேட்டுவிட்டு, இரவு திருவொற்றியூர் நெட்டுக்குப்பத்தில் வாக்குச் சேகரித்து மீனவச் சொந்தம் ஒருவரது வீட்டில் மீன் சாப்பிட்டதும் தான், நேற்றைய நாள் நிறைவுற்றது.

இப்போது, சூரியன் உதித்ததும் அண்ணா நகருக்குப் புறப்பட்டுவிட்டேன்…

கருத்துக்கணிப்புகள் மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான்! வெல்வோம் 200; படைப்போம் வரலாறு”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.