வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மித முதல் லேசான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




