இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?

தமிழ் நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழ் நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வேலூர், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி, திருப்பூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.