உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? – அண்ணாமலை கேள்வி?

உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மதுரை மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கூட, முறையாகத் தயாரித்துக் கொடுக்க இயலாத திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியதன் பொருள் என்னவென்றால், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், விரிவான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்பட்டு, மதுரை மெட்ரோ திட்டத்துக்கான அனுமதி பெறப்படும் என்பதுதான்.

ஆட்சிக்கு வந்தவுடன், வெளிநாட்டு முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் குடும்பத்துடன் பலமுறை இன்பச் சுற்றுலா சென்றீர்களே. என்ன முதலீடு வந்தது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? மத்திய அரசின் திட்டங்களால் பெறும் வளர்ச்சிக்கு, உங்கள் ஸ்டிக்கரை ஒட்ட கூச்சமாக இல்லையா?

உங்கள் ஆட்சியில், குப்பை அள்ளுவதில் கூட ஊழல் செய்து, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களை குப்பைக் கூடங்களாக மாற்றி, குப்பை மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. மதுரையில் அமைப்போம் என்று உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே”? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.