2018 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? எனக்கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து மதுரையில் “பெருந்திரள் தொடர் முழக்கப் போராட்டத்தை” நடத்தி வருகினறனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் கட்டுமான பணிக்கான நிதியை ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பழங்காநத்தம் பகுதியில் தொடர்முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“எங்கள் எய்ம்ஸ் எங்கே?” எனும் தலைப்பிலான முழக்கத்தை முன்வைத்து நடத்தப்படும் இந்த போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சயின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி ஆகியோரும், திமுக சார்பில் எம்.எல்.ஏ தளபதி, மதிமுக சார்பில் எம்.எல்.ஏ பூமிநாதன் மற்றும் தோழமை கட்சியினர், தொழில் முனைவோர் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், தென்மாவட்ட மக்களின் கோரிக்கைகளான தூத்துக்குடி இருவழி ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தேசிய மருந்தியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை (நெய்பர்) மதுரையில் துவங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவு படுத்தி, குறைந்தபட்ச கூலியாக ரூ.600 வழங்க வேண்டும், மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் போராட்டத்தில் முன்வைத்துள்ளனர்.