மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது எப்போது?-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 4,300 பணியிடங்களையும் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் துணை செவிலியர் பயிற்சி பள்ளி…

மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 4,300 பணியிடங்களையும் செப்டம்பர்
இறுதிக்குள் நிரப்பப்படும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் துணை செவிலியர் பயிற்சி
பள்ளி புதிய கட்டிடத்தினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பார்வையிட்டு
ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மேலப் பெருங்கரை கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக
கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைத்து மக்கள்
பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 துணை சுகாதார நிலையங்கள் புதிய கட்டிட வசதிகளை
பெறுவது சிறப்புக்குரியது. மிக விரைவில் ராமநாதபுரத்தில் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்தை தமிழக முதல்வர் திறந்து வைப்பார்.


தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் நல்வாழ்வுத் துறையில் 4,300 ற்கும் மேற்பட்ட
காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி எம்ஆர்பி மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதில் மருத்துவர், செவிலியர், டெக்னீசியன் போன்ற இரண்டு தரப்பிற்கு கலந்தாய்வு
முடிந்து முதல்வர் அவர்களால் பணி ஆணை வழங்க இருக்கிறது. தொடர்ச்சியாக செப்டம்பர் இறுதிக்குள் 4,300 பணியிடங்களையும் நிரப்பி பணி நியமன
ஆணை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணியினை எம்ஆர்பி
நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது என்றார் மா.சுப்பிரணியன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.