மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் தேதி சம்பந்தமான தகவல்கள் ஏதுமில்லை என ஆர்டிஐயில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை தோப்பூரில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. என்றாலும் மதுரை எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டபோது அதனுடன் அறிவிக்கப்பட்ட இமாச்சல பிரதேச எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து ஆர்டிஐயில் தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், “திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 2026 ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியும். கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது சார்ந்த தகவல்கள் இல்லை” என்று தெரிவித்துள்ளது.
மேலும், “மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான ரூ.1977.8 கோடியில், 82 சதவீதமான ரூ.1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜைய்கா நிறுவனம் வழங்கும். 20 சதவீதத் தொகையான ரூ.350.1 கோடியை மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் வழங்கும். சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் உள்பட முதலீட்டுக்கு முந்தைய பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதற்காக 12.35 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளத” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.