முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

தமிழகத்தில் தொடரும் கனமழை – பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் கனமழை காரணமாக திருவாரூர் உட்பட மூன்று மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுமுறை அளித்துள்ளார்.

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் பல்வேறு முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹரியானாவில் லாரி மோதி 3 விவசாயிகள் உயிரிழப்பு

Halley Karthik

ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என்பது தவறான செய்தி – அமைச்சர் செந்தில் பாலாஜி

EZHILARASAN D

தமிழகம் கடந்த 10 ஆண்டுகளாக பாழ்பட்டு போயுள்ளது: மு.க.ஸ்டாலின்

Halley Karthik