The GOAT படத்தின் ட்ரெய்லர் எப்போது ? – அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி!

தி கோட் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் …

தி கோட் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (The G.O.A.T. – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.சின்ன சின்ன கண்கள் பாடல் மறைந்த பாடகியும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணியின் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல மெலோடியாக கொண்டாடப்பட்டது.

கோட் படத்தின் 3வது பாடல் “ஸ்பார்க்” பாடலின் லிரிக்கல் வீடியோ ஆகஸ்ட் 3ம் தேதி வெளியானது. இப்பாடலை வெங்கட் பிரபுவின் அப்பாவான கங்கை அமரன் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான விருஷா பாலு ஆகியோர் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.

தி கோட் திரைப்படம் ஐ மேக்ஸ்,இபிஐக்யூ தொழில்நுட்ப திரைகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சாதாரண திரைகளைவிட ஐமேக்ஸ், இபிஐக்யூ தொழில்நுட்பம் மேம்பட்ட திரைகளில் பார்த்தால் திரைப்படம் நல்ல திரை அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வபோது தி கோட் படத்தின் அப்டேட் குறித்த தகவல்களை பகிர்ந்து வரும்  படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

தி கோட் படத்தின்  பிரமாண்டமான டிரைலர் தயாராகிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு இன்னும் சில நாட்கள் கால அவகாசம் கொடுங்கள். படத்தின் டிரைலர் குறித்து நாளை அப்டேட் வரும்” என அர்ச்சனா கல்பாத்தி  தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.