முக்கியச் செய்திகள் சினிமா

நான் இயக்குநராக இருந்தபோது பல கோடிகள் கையில் இருந்தது-பிரபல இயக்குநர்

“நான் இயக்குநராக இருக்கும்போது பல கோடிகள் என் கையில் இருந்தது. ஆனால்
தயாரிப்பாளர் ஆன பிறகு என் வீட்டை கூட பாதுகாக்க முடியாத சூழல் வந்து விடுமோ
என்ற பயம் இருந்தது” என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள லோக்கல் சரக்கு திரைப்படத்தின் ஆடியோ
வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்
கே.ராஜன், நடிகர் ராதாரவி, சினேகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கவிஞர் சினேகன் பேசுகையில், “பொதுவாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நடிகர் நடிகைகள் தான் வர மாட்டார்கள். ஆனால் பாடல் ஆசிரியர் கூட வராமல் உள்ளனர்.
ஒரு படத்தில் ஒப்புக் கொண்டால் அந்தப் படம் திரைக்கு வரும் வரை அனைவருக்கும்
பொறுப்பு உள்ளது. கவிஞர்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது. இயக்குனர்கள், எழுத்தாளர்களாக இருப்பது அபூர்வம். நல்ல எழுத்தாளர்கள் படம் வெற்றி பெற வேண்டும்.
நிறைய கலைஞர்களுக்கு இது ஒரு சாபக்கேடு. கலைஞர்கள் வெற்றி பெறும் போது அதை
பார்க்க அவர்களது பெற்றோர்கள் இருப்பது இல்லை.

விமர்சனம் ஒருவரை செதுக்க வேண்டுமே தவிர சிதைக்கக் கூடாது. யூடியூப் தலைப்பு ஒன்றாக உள்ளது. ஆனால் உள்ளே வேறு ஒரு செய்தி இருக்கும் இதுபோன்று செய்ய வேண்டாம். 3 நாட்களுக்கு பிறகு தான் விமர்சனம் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் சொல்லி உள்ளது. அதை கடைபிடித்தால் சிறப்பாக இருக்கும்” என்றார்.

நடிகர் ராதா ரவி பேசுகையில், “சினிமாவை மக்கள் தற்போது பார்ப்பதே இல்லை. ஆனால் டாஸ்மாக் அப்படியா கூட்டம் அதிகமாக இருக்கும். சினிமாவில் டிக்கட் வாங்குவது போல மது வாங்குகிறார்கள்.

மனோரமா எனக்கும் ஜோடி, என் அப்பாவிற்கு ஜோடி, என் அண்ணனுக்கும்
ஜோடியாக நடித்து உள்ளார். அப்படிப்பட்ட பெருமை அவருக்கு சேரும். ஒரே ஆள் படம் வாங்குகிறார் என்று சொல்கிறார்கள். அதனால் தான் கமல் படம் 100 நாட்கள் ஓடுகிறது. நான் 100 நாட்கள் பார்த்தே ரொம்ப நாள் ஆகிறது. தவறான தலைப்பை வைத்தால் தான் மக்கள் பார்க்கிறார்கள். நல்ல தலைப்பை வைத்தால் பார்க்க மாட்டார்கள்.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:

லோக்கல் சரக்கு என்று சொல்லும்போது சரக்கு என்பது மதுபானம் மட்டும் இல்லை. இந்தியாவில் உற்பத்தி ஆகும் பொருட்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாடு உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களை பயன்படுத்தினால் அந்த நாடு வளம் அடையும்.

என்னுடைய படம் வெளியாகும்போது என்னுடைய தயாரிப்பாளர் நான் இருக்கும்
தெருவிற்கு கூட வர கூடாது என்றார். வெற்றி தான் சினிமாவில் நண்பன். புலன் விசாரணை வெற்றிப் பெற்றது. உடனே அடுத்த படத்திற்கு பேச ஆரம்பித்தார்.
நான் இயக்குநராக இருக்கும் போது பல கோடிகள் என் கையில் இருந்தது.
சாலிகிராமத்தில் நான் ஒரு வீடு வாங்கினேன். அந்த தெருவை வாங்கும் அளவிற்கு
என்னிடம் பணம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆன பிறகு என் வீட்டை பாதுகாக்க
முடியாத சூழல் வந்து விடுமோ என்ற பயம் இருந்தது.

தயாரிப்பாளர்கள் ஒன்றாக இணைந்து ஒரு கட்டமைப்பை உருவாக்கினால் தான் சுமூகமாக இருக்க முடியும். திரைப்படத் துறை ஒரு லாபம் தரும் தொழில். அனைவரும் பகிர்ந்து கொண்டால் தான் லாபம் வரும். நஷ்டம் தயாரிப்பாளருக்கு லாபம் மற்றவர்களுக்கு என்று தற்போது மாறி உள்ளது. 70, 80 சதவீதம் நடிகர்கள் சம்பளம் 20 சதவீதம் தான் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.

நான் படம் எடுக்கும்போது ஒரு படத்திற்கு ஒரு மேனஜர் தான். ஆனால் இப்போது
ஒவ்வொருவரும் ஒரு மேனேஜர் வைத்து கொண்டுள்ளனர். பெப்சி டார்ச்சர் என்று சொல்கிறார்கள். எங்களை குறை சொல்வதால் என்ன. எங்கள் சங்கம் சார்பில் நான் இதை சொல்ல வேண்டும். அதை பேசி சரி செய்யலாம் என்றார் செல்வமணி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருந்தது: ஓ.பன்னீர்செல்வம்

Halley Karthik

தமிழகத்தில் இந்த மாதம் பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை! – அமைச்சர் செங்கோட்டையன்

Nandhakumar

67 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவிலிருந்து திரும்பிய மூதாட்டி…கோபாலபுரம் இல்லத்தில் நெகிழ்ச்சி தருணங்கள்…

Web Editor