தெலுங்கில் முழு வீச்சில் களமிறங்கும் ’வாத்தி’ தனுஷ்

தோழி பிரேமா, மிஸ்டர் மஜ்னு உள்ளிட்ட படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி தற்போது தனுஷை வைத்து வாத்தி எனும் படத்தை எடுத்து வருகிறார். இந்தி, ஹாலிவுட் என பல இண்டஸ்ட்ரியில் நடித்து…

தோழி பிரேமா, மிஸ்டர் மஜ்னு உள்ளிட்ட படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி தற்போது தனுஷை வைத்து வாத்தி எனும் படத்தை எடுத்து வருகிறார். இந்தி, ஹாலிவுட் என பல இண்டஸ்ட்ரியில் நடித்து வரும் தனுஷ் வாத்தி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தைச் சிதாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்திற்கு வாத்தி என்று தமிழிலும் சார் என்று தெலுங்கிலும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தனுஷ் இந்தப் படத்தில் கல்லூரி ஆசிரியராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் தெலுங்கு பதிப்பிற்கு தனுஷ் தனது சொந்தக் குரல் டப் செய்துள்ளார். இதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் முழுவீச்சில் ரசிகர்களிடம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.