முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

கண்டிப்பாக ‘Agree’ கொடுக்க வேண்டும்… பரபரப்பாக பேசப்படும் வாட்ஸ் அப்பின் புதிய பிரைவசி பாலிசி!

வாட்ஸ் அப் நிறுவனம் புதிய பாலிசி கொள்கைகளை வெளியிட்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இந்த ஆப்பில் அடிக்கடி அப்டேட் கொடுக்கப்படுவது வழக்கம். அதனுடன் Privacy policy-ம் கொடுக்கப்பட்டிருக்கும். பிரைவசி பாலிசியை படிக்காமலேயே பெரும்பாலானோர் உடனடியாக Accept கொடுத்து விட்டார்கள். அந்தவகையில் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது அதன் பிரைவசி பாலிசியை மாற்றியுள்ளது. இதனை படித்து பார்த்தவர்கள் அனைவரும், இனி வாட்ஸ் அப்பில் நமது தகவல்கள் பாதுகாப்பாக இருப்பது கேள்விக்குறிதானா என கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் மேலும் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த பிரைவசி பாலிசியை Accept செய்வதை விட்டால் உங்களுக்கு வேறு வழி இல்லை. இல்லையென்றால் பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு உங்களுடைய வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்த முடியாமல் போகும். மீடியா ஃபைல்களை தங்கள் சர்வர்களில் வாட்ஸ் அப் எப்படி ஸ்டோர் செய்யப் போகிறது என்பதையும் இந்த பாலிசி விளக்கியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் அந்நிறுவனம் தகவல்களை ஃபேஸ்புக் உடன் பகிரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் மொபைல் எண், சேவை தொடர்பான தகவல்கள், Mobile device தகவல்கள், IP address உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் வாட்ஸ் அப்பால் சேமித்து வைக்கப்பட்டு பேஸ்புக் நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்படும். உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் மட்டுமே பிரைவசியில் இருக்க வாய்ப்புள்ளது என்பது இதில் தெரிகிறது. முன்னர் இருந்ததை போல Encrypted வடிவில்தான் இந்த தகவல்கள் அனைத்தும் சேமிக்கப்படவிருக்கின்றன. அதேபோல் நீங்கள் ஃபார்வேர்டு செய்யும் மெசேஜ்களையும் வாட்ஸ் அப் கண்காணிக்கவிருக்கிறது. போலி தகவல்கள் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கு முன்னதாக கொடுக்கப்பட்ட அப்டேட்டில், வாட்ஸ் அப் தகவல்களை பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்ய அனுமதி அளிப்பதற்கான ஆப்ஷனை நீங்கள் வேண்டுமென்றால் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் இந்த முறை நீங்கள் Accept செய்வதை விட்டால் வேறு ஆப்ஷன் இல்லை. இந்த பிரைவசி பாலிசிக்கு எதிர்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

45 ஏக்கரில் விழா மேடை… லட்சம் பேருக்கு கறி விருந்து… அமைச்சர் மூர்த்தி இல்ல விழா

Web Editor

சென்னை சென்ட்ரலில் மத்திய சதுக்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Arivazhagan Chinnasamy

இங்கிலாந்து ராணி மறைவு-தலைவர்கள் இரங்கல்

Web Editor

Leave a Reply