உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக மின்சார ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேற்கு ரயில்வேயின் பிரத்யேக சரக்கு ரயில் பாதையில், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் முறையே ரெவாரி-புதிய மதார் பிரிவு அமைந்துள்ளது. 306 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சரக்கு ரயில் பாதையை, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல், புதிய அட்டலி-புதிய கிஷன்கர்க் இடையே மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் இரட்டை அடுக்கு ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட பெட்டக ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பிரத்யேக சரக்கு ரயில் பாதை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய வளர்ச்சி மையங்களை உருவாக்க உதவும் என்றார். தொடர்ந்து பேசிய மோடி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள், நாட்டு மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.