“நான் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகிவிடுகிறது!” – மேயர் பிரியா

நான் பர்கர் சாப்பிட்டாலும், முடிவெட்டினாலும் கூட பிரச்சனையாகிறது என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராஅட்சிஒ மேயர் பிரியா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “நான் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகிவிடுகிறது. முதல் நாளிலிருந்து இன்று வரை, மிகச் சாதாரண விஷயங்கள் கூட ஒரு பிரச்சினையாக மாற்றப்படுகின்றன

நான் ஒரு பர்கர் சாப்பிட்டால் அது பிரச்சினையாகிறது; தலைமுடியை வெட்டிக்கொண்டால் அதுவும் பிரச்சினையாகிறது. நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு, விமர்சனத்திற்கும் உள்ளாகிறது.

நான் ஒரு பெண் என்பதாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலோதான் இப்படி நடக்கிறதோ என்று சில நேரங்களில் எனக்குத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை, பெண்ணியவாதிகளும் பெண்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்பவர்களும் எங்கே மறைந்துவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை.

அரசியலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ அல்லது மரியாதைக்குத் தகுதியற்றவர்களோ அல்ல. பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணை, அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

ஒவ்வொரு பெண்ணுக்கும் அதற்கே உரிய கண்ணியமும் சுயமரியாதையும், தனது வாழ்க்கையைத் தனது விருப்பப்படி அமைத்துக்கொள்ளும் உரிமையும் உண்டு. மேயர் என்ற பதவியைத் தாண்டி, அந்தப் பெண்ணையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.