எந்தெந்த அறிகுறி உடையவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மாநில அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், ஒருவருக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலே அவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.+
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்த கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபருக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாத நிலையில், அவர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள தேவை இல்லை எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டு கோவிட் சிகிச்சை மையங்கள் அல்லது வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தாலே 7வது நாள் முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும், அவர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் முழுமையாக குணமடைந்த பிறகுதான் டிஸ்சார்ஜ் செய்யப்பட வேண்டும் என மாநில பொது சுகாதத்துறையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.