முக்கியச் செய்திகள் தமிழகம்

இன்று முதல் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, இன்று முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தினசரி இயக்க கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு 10 ஆயிரத்து 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், பிற ஊர்களிலிருந்து 6 ஆயிரத்து 468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16 ஆயிரத்து 768 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கோயம்போடு பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

“கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் ஊழலை எப்படி ஒழிப்பார்கள்”

Gayathri Venkatesan

யானையை தீ வைத்து கொன்ற, நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி!

Niruban Chakkaaravarthi

புதுச்சேரியில் எம்எல்ஏ ஜான்குமாருக்கு பதவி கேட்டு பாஜக அலுவலகம் முற்றுகை

Gayathri Venkatesan