முக்கியச் செய்திகள் உலகம் சினிமா

ஸ்குவிட் கேம் Player 001 – கோல்டன் குளோப் பெற்று சாதனை!

கோல்டன் குளோப் 2022-வின் சிறந்த துணை நடிகருக்கான விருதை ஸ்குவிட் கேம் சீரீஸில் நடித்த ஓ யோங்-சு பெற்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 17-ம் தேதி தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘ஸ்குவிட் கேம்’ சீரீஸ் நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்த சீரீஸ் வெளியாகி உலகம் முழுவதும் பெறும் வரவேற்பைப் பெற்றது. இதில் Player 001 என்ற மிக முக்கியமான துணை காதாப்பாத்திரத்தில் 77 வயதான நடிகர் ஓ யோங்-சு நடித்திருக்கிறார். இவர் தனது எதார்த்தமான நடிப்பால் பலரின் மனங்களிலும் நீங்கா இடம்பெற்றார்.

இவரின் இந்த திறமையை அங்கீகரிக்கும் வகையில் தற்போது கோல்டன் குளோப் 2022-வின் சிறந்த துணை நடிகருக்குகான விருது வழங்கப்பட்டது. ஆஸ்காருக்கு அடுத்தப்படியாக மிக முக்கியமான விருதாக கோல்டன் குளோப் கருதப்படுகிறது. இந்நிலையில், கோல்டன் குளோப் விருதை பெற்ற முதல் கொரியன் நடிகர் இவர் என்ற பெருமையையும் ஓ யோங்-சு பெற்றுள்ளார். சாதனைகள் படைப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என ஓ யோங்-சு நிரூபித்திருப்பதாக பலரும் இவரைப் பாராட்டி வருகின்றனர்.

கோல்டன் குளோப் விருதுக்கான ’சிறந்த தொடர்’ பட்டியலில் ஸ்குவிட் கேம் சீரீஸ் இடம்பெற்றிருந்ததை அடுத்து, அந்த விருதை ’பெல்ஃபாஸ்ட்’ தொடர் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

திருமணமான 28 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Halley Karthik

கான்பூர் டெஸ்ட்: நியூசி.296 ரன்களுக்கு ஆல் அவுட்; அக்‌ஷர், அஸ்வின் அசத்தல்

Halley Karthik

சிப்காட் ஒரகடத்தில் மருத்துவ உபகரண தொழிற்பூங்கா

Saravana Kumar