குஜராத், இமாச்சலில் விஐபி வேட்பாளர்கள் நிலை என்ன?

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டச்சபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் விஐபி வேட்பாளர்களின் நிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம். குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக…

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டச்சபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் விஐபி வேட்பாளர்களின் நிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. குஜராத் முதலமைச்சர் வேட்பாளரான பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

இதேபோல் பாஜக சார்பாக ஜாம்நகர் வடக்கு தொகுதியில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா போட்டியிட்டார். இவருக்காக அவரின் கணவர் ரவீந்திர ஜடேஜா வாக்கு சேகரித்தார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ரிவாபா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாஜக சார்பில் விராம்காம் தொகுதியில் போட்டியிட்ட ஹர்திக் படேல் முன்னிலையில் உள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் ஜெயராம் தாக்குகூர் செராஜ் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து அத்தொகுதியில்  போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சேத்ராம் தாகூர் பின்னடை சந்தித்துள்ளார். இதேபோல் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் முகேஷ் அக்னிகோத்ரி முன்னிலை உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.