உடல்நலக் குறைவுக்கான காரணம் என்ன..? – மயாங்க் அகர்வால் பகீர் புகார்.!

இந்திய கிரிக்கெட் வீரர் மயாங்க் அகர்வால் தொண்டை பகுதியில் திடீர் எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்  புகார் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் மயாங்க் அகர்வால் நேற்று…

இந்திய கிரிக்கெட் வீரர் மயாங்க் அகர்வால் தொண்டை பகுதியில் திடீர் எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்  புகார் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் மயாங்க் அகர்வால் நேற்று விமானம் மூலம் சூரத் செல்ல புறப்பட்டுள்ளார்.  அப்போது, அவர் இண்டிகோ விமானத்தில் அவரது இருக்கையில் வைக்கப்பட்டிருந்த நீரை குடித்துள்ளார்.  அதனை குடித்த உடனே அவருக்கு வாய் மற்றும் தொண்டை பகுதியில் அசவுகரியம் ஏற்பட்டு, உடனடியாக அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மயாங்க் அகர்வால், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தனது இருக்கையில் கொடுக்கப்பட்ட பொருள் குறித்து விசாரிக்கவும், இதுகுறித்து விளக்கம் அளிக்கவும் அவரது தரப்பில் இருந்து புகார் கொடுத்துள்ளார். திரிபுரா மாநில சுகாதாரத்துறை செயலர் கிரன் கிட்டே இதுகுறித்து பேசும் போது, அவரது புகார் காவல்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

திரிபுரா போலீசார் தரப்பில் இருந்து, மயாங்க் அகர்வால் தற்போது சீராக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். மயாங்க் அகர்வால் இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருபவர்.  தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கர்நாடக அணியின் கேப்டனாக அவர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.