முக்கியச் செய்திகள் இந்தியா

குளிர்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவையின் 52% நேரம் வீணடிப்பு

குளிர் கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் 52% நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்கூட்டத் தொடருக்கு முந்தைய தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஏற்படுத்திய அமளி காரணமாக இந்த கூட்டத்தொடரில் 12 எம்.பிக்களை சபாநாயகர் வெங்கையா நாயுடு சஸ்பெண்ட் செய்தார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். எம்.பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற வேண்டுமென மற்ற எம்.பிக்கள் கோரிக்கை வைத்து போராட்டம் மற்றும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எம்.பிக்கள் தொடர் முழக்கங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடரின் முதல் வாரத்தில் மாநிலங்களவையின் 52% நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் வாரத்தின் இறுதி நாட்களான வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அவையின் உற்பத்தித்திறன் 95 மற்றும் 100%ஐ எட்டியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Advertisement:
SHARE

Related posts

உள்நாட்டு விமானங்களில் இனி உணவில்லை!

எல்.ரேணுகாதேவி

காபூலில் 150 இந்தியர்கள் கடத்தலா? தலிபான்கள் மறுப்பு

Gayathri Venkatesan

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்: சூர்யா நற்பணி மன்றம் அறிக்கை

Ezhilarasan