இந்தோனோஷியாவில் நடைபெற்ற BWF உலக டூர் தொடரின் இறுதி போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை தென் கொரிய வீராங்கனை அன் சே யங்-யிடம் தோல்வியடைந்துள்ளார்.
கடந்த நவம்பர் 28ம் தேதி தொடங்கிய BWF உலக டூர் தொடர் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை 21-15, 15-21, 21-19 என அரையிறுதியில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்திருந்தார் சிந்து.
இதனைத் தொடர்ந்து அன் சே யங்-யிடம் மோதிய சிந்து, 16 – 21, 12 – 21 எனும் செட் கணக்கில் தோல்வியை தழுவினார். முன்னதாக கடந்த 2018ல் BWF உலக டூர் தொடரை வென்று சாதனை படைந்தார் சிந்து. இப்பட்டதை வென்ற முதல் இந்தியரும் சிந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல தென் கொரியா சார்பில் இப்பட்டத்தை முதன் முறையாக அன் சே யங் வென்று சாதனை படைத்துள்ளார்.
https://twitter.com/India_AllSports/status/1467403171320393729
மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவரும், உலக பேட்மிண்டன் தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் பி.வி.சிந்துவை உலக தரவரிசை பட்டியலில் 6வது இடத்தில் உள்ள வீராங்கனை தோற்கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








