மத்திய பட்ஜெட் 2023 – நிறுவனங்களின் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து இந்திய நிறுவனங்களின் தலைவர்கள் கூறிய கருத்துக்களை தற்போது பார்க்கலாம். உதய் கோடெக் –…

image

2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து இந்திய நிறுவனங்களின் தலைவர்கள் கூறிய கருத்துக்களை தற்போது பார்க்கலாம்.

உதய் கோடெக் – சிஇஓ, கோடெக் மஹிந்திரா வங்கி

நீண்ட கால நோக்கோடும் கட்டமைப்பாகவும் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தனியாக வருமானத்தை ஈட்டக்கூடியவர்களுக்கு உடனடியாக பலன் சென்றடையும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் தனிநபர் வருமானத்தை உயர்த்துவதற்கான அடித்தளத்தை இந்த பட்ஜெட் வழங்கியுள்ளது.

ரித்தேஷ் அகர்வால், நிறுவனர் மற்றும் சிஇஓ – ஓயோ

ஒட்டுமொத்த வளர்ச்சியை மைப்படுத்தி நாடு செல்லும் வகையில் இந்த பட்ஜெட் அமைக்கப்பட்டள்ளது. நாம் இப்போது அமிர்த காலத்துக்குள் நுழைந்திருக்கிறோம். பத்தாண்டுகளில் ஸ்டார்ட் அப் நாடாக நாம் உருவெடுக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது.

ஹர்ஷ் கோயங்கா – தலைவர், ஆர்பிஜி எண்டர்பிரைசஸ்

இந்த பட்ஜெட் ‘எம்பாபே’ போன்று உள்ளது, ஆனால் மெஸ்ஸி போன்று இல்லை. உலக சாம்பியனாக இந்தியா ஆவதற்கான பாதையை இந்த பட்ஜெட் வகுத்துள்ளது. அனைவருக்குமான திட்டம், உள்கட்டமைப்புக்கான முதலீடு என பல்வேறு அறிவிப்புகள் மூலம் கோல் அடிக்க அடித்தளம் வகுக்கப்பட்டுள்ளது.

அனில் வர்மா – சிஇஓ, கோத்ரேஜ்&பேய்ஸ்

அனைவருக்குமான பட்ஜெட்டாக இது உள்ளது. உள்கட்டமைப்புக்கான முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு வேலைவாய்ப்பையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவின் போட்டித்தன்மை அதிகரிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

மனிஷ் சர்மா – சிஇஓ, பேனசோனிக் லைப் சயின்சஸ் சொல்யூசன்ஸ்

நிறுவனங்கள் மற்றும் சாமானியன் ஆகிய இரண்டு தரப்பினருக்கும் நல்ல செய்தியை இந்த பட்ஜெட் கொடுத்துள்ளது. தொடர்ந்து செய்யப்படும் முதலீடுகளும் அது சார்ந்த கொள்கைகளும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வழிவகை செய்யும் அளவுக்கு இந்த பட்ஜெட் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.