பாதுகாப்புத் துறைக்கு ரூ. 5.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2023- 2024ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், பாதுகாப்புத் துறைக்கு ரூ. 5.94 லட்சம் கோடி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 2.70 லட்சம் கோடி, ரயில்வே துறைக்கு ரூ. 2.41 லட்சம் கோடி, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு ரூ. 2.06 லட்சம் கோடி, உள்துறைக்கு ரூ.1.96 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரசாயனம் மற்றும் உரத்துறைக்கு ரூ.1.78 லட்சம் கோடி, ஊரக வளர்ச்சித் துறைதக்கு ரூ.1.60 லட்சம் கோடி, விவசாயம் மற்றும் உழவர் நலத் துறைக்கு ரூ.1.25 லட்சம் கோடி மற்றும் தகவல் தொடர்புத் துறைக்கு ரூ. 1.23 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








