முக்கியச் செய்திகள்

பொதுக்குழு கூட்டத்துக்குப் பின் அதிமுகவில் நடந்தது என்ன?

ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பிறகு அதிமுகவில் என்னென்ன நடந்தது என்பதை இந்தத் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்…

ஜூன் 23ம் தேதி காலை 4.30 மணிக்கு அதிமுக பொதுக்குழுவில் திட்டமிடப்பட்ட தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. அன்றைய அதிமுக பொதுக்குழுவில் கூடியிருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஜூன் 24ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் பிரதமர், உள்துறை அமைச்சருடன் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜூன் 27ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்யலாம் என கருதி ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். ஜூன் 28ம் தேதி ஒருங்கிணைப்பாளர் அனுமதியின்றி பொதுக்குழு நடைபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பினார். அன்றைய தினமே, பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் தவிர புதிய தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. ஜூன் 29ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் கையொப்பமிடுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.

ஜூன் 30ம் தேதி, ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியிருக்கும் கடிதம் செல்லத்தக்கது அல்ல என ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் அனுப்பினார். ஜூலை 2 அன்று குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே சந்தித்து ஆதரவளித்தனர். ஜூலை 7ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கில் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. ஜூலை 8ம் தேதி வழக்கின் இரண்டாவது நாள் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாமக்கல்லில் குட்கா விற்பனை செய்த இருவர் கைது

Jeba Arul Robinson

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸுக்கு தேவையில்லை: ராகுல் ஆவேசம்

EZHILARASAN D

அரசியலுக்கு வந்ததால் எனக்கு 300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு: கமல்ஹாசன்!

Halley Karthik