அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று காலை 9 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, தீர்ப்பிற்கு பிறகு 9.15 மணிக்கு பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் அடங்கிய பேனர்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன.
பொதுக்குழு மற்றும் செயற்குழுவிற்காக பிரமாண்டமான முறையில் தனித்தனியாக மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார். குறிப்பாக 3 ஆயிரம் நபர்கள் வரை அமர்ந்து பொதுக்குழுவை நேரடியாக காணக்கூடிய வகையில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அதிமுகவில் தலைவர், பொதுச் செயலாளர், ஒற்றை தலைமை என அனைத்துமே எடப்பாடி பழனிசாமிதான் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்