அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு சென்னை சென்ற வேனும் கன்டெய்னர் லாரியும் மதுராந்தகம் அருகே மோதியது. இதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒருவர் சிகிச்சையில் பலனின்றி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சியில் இருந்து சென்னை தேசிய
நெடுஞ்சாலையில் இரட்டை ஏரிக்கரை என்ற இடத்தில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற கண்டைனர் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசை சாலைக்கு சென்றது.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கொடுங்காவனூர் பகுதியில்
இருந்து சென்னையில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக ஆம்னி பேருந்தில் அதிமுகவினர் வந்துகொண்டிருந்தனர். அந்த வேன் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 10க்கும் அதிகானோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில்
சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் திருச்சியில் இருந்து சென்னை
சென்னையில் இருந்து திருச்சி ஆகிய இரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








