லியோ படத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன..? – அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..!

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகியுள்ள லியோ படத்தின் சென்சார் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத்,…

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகியுள்ள லியோ படத்தின் சென்சார் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலி கான் என ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், அண்மையில் வெளியான போஸ்டர்களும், அதில் இடம்பெற்றிருந்த வாசகங்களும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. இதுமட்டுமல்லாமல், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாட்களை முன்னிட்டு வெளியான சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோக்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

‘லியோ’ படத்தின் முதல் பாடலான ’நா ரெடி’ வெளியானதும் கொண்டாடத் தொடங்கிய ரசிகர்களுக்கு, லியோ ஆடியோ லான்ஞ்ச் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நேற்று ’லியோ’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘Badass’-ஐ படக்குழு வெளியிட்டது.

விஷ்ணு எடவன் வரிகளில், அனிருத்தின் குரலில் வெளியான ’Badass’ பாடல் இணையத்தில் வைரலானது. தொடர்ந்து பலரும் ரசித்து வரும் இப்பாடல், யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் லியோ. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதால் அதன் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்திற்கான சென்சார் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.