முக்கியச் செய்திகள் குற்றம்

அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது

மதுரவாயலில் அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். அவர், நேற்று முன்தினம் வேலூர் செல்வதற்காக, சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசுப் பேருந்தில், தனது தாயுடன் சென்றுள்ளார். அப்போது பின் சீட்டில் அமர்ந்திருந்த ராகவன், என்பவர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால், வானகரம் அருகே பேருந்து நிறுத்தப்பட்டு மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அண்மைச் செய்தி: டெல்லியில் திறக்கப்பட்டுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

அந்த நபர் குறித்து வீடியோ எடுத்த பெண் வழக்கறிஞர், இது போன்ற இடைநில்லா பேருந்துகளில் நடத்துநர் இருக்க வேண்டும் எனக் கூறினார். மேலும், அந்த பெண், புகாரளித்த ஒரு சில மணி நேரத்திலே போலீசார் நடவடிக்கை எடுத்ததிற்கு, அந்த பெண் நன்றி தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த மழை நீர்: பொதுமக்கள் அவதி

Web Editor

எம்.பி.யான இசையமைப்பாளருக்கு குவியும் பாராட்டு

Web Editor

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்- ஃபிஃபா நடவடிக்கை

Web Editor