முக்கியச் செய்திகள் தமிழகம்

என்ன செய்கிறார் ஜெயலலிதாவின் உதவியாளர் ?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவராக திகழ்ந்த அவரது உதவியாளர் பூங்குன்றனை இன்றைய அதிமுகவினர் மறந்துவிட்டதாகவே தெரிகிறது. யார் எது சொன்னாலும், ஜெயலிலதா உயிருடன் இருந்தவரை, ‘அம்மா கிட்ட கேட்டு சொல்லுகிறேன்’ என முழு விசுவாசியாக திகழ்ந்தவர் பூங்குன்றன். அப்படிபட்ட பூங்குன்றன் இன்று என்ன செய்கிறார். அவரது வாழ்வாதாரம் எப்படி உள்ளது என்பதனை விவரிக்கிறார் இராமானுஜம்

பூங்குன்றம் சங்கரலிங்கம் என்பது அவரது முழுப்பெயர். பூங்குன்றன் என்று சொன்னாலும் அதிமுகவில் அனைவருக்கும் தெரியும், அவரது பெயருக்கு பின்னால் இருக்கும் அவரது தந்தையான, சங்கரலிங்கம் என்ற பெயரை சொன்னாலும் அனைவருக்கும் தெரியும். அந்த இருவருமே ஜெயலலிதாவிற்கு உதவியாளராக இருந்தவர்கள்தான். ஜெயலலிதாவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்டி சோமசுந்தரம் மூலம் அறிமுகமானவர் அவரது தந்தை சங்கரலிங்கம். அவரும் ஜெயலலிதாவிற்கு உதவியாளராக பணியாற்றினார். அவரது மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவே விரும்பி அழைக்கப்பட்டவர்தான் பூங்குன்றன். இந்த பூங்குன்றனுக்கு தெரிந்த விஷயங்கள் என்னவென்றால் அந்த அம்மாவிற்கு விசுவாசமாக இருப்பது, கடவுள்களை தரிசிக்க கோயில் கோயிலாக செல்வது என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதாவின் மறைவிற்கு முன்னர் பூங்குன்றனின் நட்பு கிடைக்காதா என ஏங்கியவர்கள் பலர், ஆனால் இன்றோ, அவரோ வறுமையில் வாடுகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை மற்றும் தஞ்சாவூரில் வசித்து வந்த பூங்குன்றன் தற்போது தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தன் உறவினருக்குச் சொந்தமான வீட்டில் இருந்தபடி விவசாயம் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார். அந்த அம்மையாரின் மறைவு அவரை அசைத்து பார்த்துவிட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அமைதியான பூங்குன்றன் அரசியலிலிருந்து முழுமையாக ஒதுங்கிக் கொண்டார். அதற்கு காரணம் எந்த அணியில் போய் சேர்ந்தாலும், அவர்கள் கண்டிப்பாக தன்னை மற்றொரு அணியின் ஆளாக இருப்பாரோ என சந்தேகப்படுவார்கள் என்ற எண்ணம் பூங்குன்றனிடம் மேலோங்கி காணப்படுகிறது. ஏனென்றால் பூங்குன்றனை தெரியாத நிர்வாகிகளே அதிமுகவில் கிடையாது என்பதுதான் அவருக்கு சிக்கலே என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதுபற்றியெல்லாம் பூங்குன்றனுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ‘அம்மாவின் மறைவை பூங்குன்றனால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் அதிலிருந்து மீளவும் இல்லை. அவருக்கு எப்போதெல்லாம் மனசு சங்கடப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவருக்கு பிடித்த முருகனை வழிப்பட கோயில் கோயிலாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். விவசாயத்தின் மீது ஆர்வம் காரணமாக இப்போது சிறிய அளவில் விவசாயம் செய்து வருகிறார். ஆனால் இது அவரது குடும்பத்தின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. இருப்பினும் கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு வாழ்கிறார் பூங்குன்றன். இது ஒருபுறமிருக்க, அம்மாவின் கொள்கைகளுக்கு எதிராக அதிமுக செல்வதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனை பல பதிவுகளாக பேஸ் புக்கில் பதிவிட்டு வருகிறார். இவற்றில் சில விஷயங்களை அதிமுக தலைவர்கள் சீரியசாக எடுத்துக்கொண்டு சரி செய்ததும் உண்டு. இருப்பினும் அதிமுக தற்போது நடக்கும் பல விஷயங்கள் அவருக்கு ஏற்புடையதாக இல்லை’, எனக் கூறுகின்றனர் அவரது நண்பர்கள்.

அதிமுகவில் மனகசப்புகள் எல்லாம் மறந்து என்று ஒன்றிணைந்து ஒரே அணியாக செயல்படுகிறார்களோ அன்று தாமும் அதிமுகவில் இணைந்து பணியாற்றுவேன் என கூறி வருகிறாராம் பூங்குன்றன்.

இராமானுஜம்.கி

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பணக்குடி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது

Jeba Arul Robinson

ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Halley Karthik

கனமழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Ezhilarasan