குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என ட்விட்டர் வாயிலாக லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டு குரூப் 4 நடத்தப்பட்டது. ஆனால், 7 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை உடனே வெளியிடக் கோரி லட்சக்கணக்கான தேர்வர்கள் ட்விட்டரில் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: கடற்படை ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் மீட்பு
7,301 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. பின்னர், ஜூலை 24 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், அக்டோபர் மாதம் வெளியாக வேண்டிய முடிவுகள் 7 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாமல் தாமதமாகியுள்ளது. சுமார் 18 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதியுள்ள நிலையில், மார்ச் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், லட்சக்கணக்கான தேர்வர்கள் ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக்கில் ரிசல்ட் தொடர்பாக தேர்வாணையத்தை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் #WeWantGroup4Results எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
-ம.பவித்ரா








