மும்பை கடற்கரை அருகே விபத்துக்குள்ளான இந்திய கடற்படையின் ஹெலிகாப்டரில் இருந்து 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்திய கடற்படைக்குச் சொந்தமான உள்நாட்டுத் தயாரிப்பான ஏஎல்ஹெச், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் அவசரமாக மும்பை கடற்கரையில் இன்று தரையிரக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து, கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது: இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதனால், இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் மும்பை கடற்கரைக்கு அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதையும் படிக்க: கேரள முதல்வரின் செயலாளரிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை!
ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பணியாளர்களும் உடனடியாக கடற்படை ரோந்துக் கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். மேலும், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா