முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021

மேற்குவங்க முதல்வராக பதவியேற்றார் மமதா பானர்ஜி!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றுகொண்ட்ர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி.

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனிபெரும்பான்மையுடன் 213 இடங்களில் வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் மமதா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெகதீப் தான்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மமதா பானர்ஜி முதல்வராக பணியாற்றிவருகிறார். பின்னர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்று முதல்வரானார். இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று நடைபெற்ற விழாவில் மமதா பானர்ஜி மட்டும் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற வியூகங்கள் வகுத்துக் கொடுத்த அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பீமன் பாசு ஆகியோருக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக மமதா பானர்ஜியின் பதவியேற்பு விழாவுக்கு மற்ற மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் அழைக்கப்படவில்லை.

இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி எதிர்த்து மமதா பானர்ஜி போட்டியிட்டார். ஆனால் அவர் 1,956 வாக்கு வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவினார். போட்டியிட்ட தொகுதியில் தோல்வியைத் தழுவினாலும் மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட வெற்றியை மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. எம்.எல்.ஏவாக வெற்றிபெறாவிட்டாலும் வெற்றி பெற்ற கட்சியினர் முதல்வரை தேர்ந்தெடுக்கலாம் என சட்டம் உள்ளது. இதன் அடிப்படையில் மமதா மேற்கு வங்க முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Advertisement:

Related posts

சென்னை மாநகர மக்களின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் என்ன செய்தார்: முதல்வர்!

Karthick

தமிழகத்தில் நாளை முதல் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து; சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் தகவல்!

Saravana

17 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு

L.Renuga Devi