கொரோனா தடுப்புப் பணிகளில் பயிற்சி மருத்துவர்கள், இறுதியாண்டு மருத்துவம் பயிலும மாணவர்களை பயன்படுத்த, மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலின் 2-ம் அலை தீவிரமடைந்துள்ளதால், நாடு முழுவதும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவர்களுக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பயிற்சி மருத்துவர்கள் மற்றும் இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களை கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதமர் அலுவலகம் அளித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.







