முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத்தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக திமுக வெற்றிபெற்றதைத்தொடர்ந்து ஆட்சியமைக்க ஆளுநர் மாளிகைக்கு மு.க ஸ்டலின் சென்றார்.

இதைத்தொடர்ந்து 133 எம்.எல் .ஏக்கள் அடங்கிய அமைச்சரவைப்பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார் .

2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக திமுக வென்றது. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மூன்றாவது முறையாக வெற்றியைத் தன்வசமாக்கினார். வருகின்ற 7ஆம் தேதி அவர் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க ஸ்டாலின் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கிண்டி ராஜ் பவனுக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து உரிமை கோரினார். மேலும் 133 எம்.எல்.ஏக்கள் அடங்கிய அமைச்சரவைப் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார்.

Advertisement:
SHARE

Related posts

பின்னணி பாடகியின் மகளுக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது!

Saravana Kumar

இனி மின்சார சைக்கிளில் 100 கி. மீ வரை பயணம் செய்யலாம்!

Nandhakumar

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கேரள பெண் யார்?