இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி….

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி…

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.