லால் சலாம் திரைப்படம் முடிவடைந்த நிலையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு
தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் திருவண்ணாமலை விழுப்புரம்
மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதமாக படமாக்கப்பட்டது.
இந்த நிலை கடந்த 15 தினங்களுக்கு முன்பாக திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த்
7 நாட்கள் தங்கி இருந்து படக் காட்சிகளில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து மற்ற கட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் லால் சலாம்
திரைப்படத்தின் படக்காட்சிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ரஜினிகாந்த் மகள்
ஐஸ்வர்யா திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனை தரிசித்தார்.







