முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுதினத்தையொட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுதினத்தையொட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் கருணாநிதியின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியில், துரைமுருகன், பொன்முடி, ஏ.வ வேலு, கே.என். நேரு என அமைச்சர்கள் உட்பட, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணகானோர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.