மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 7 மணி நிலவரப்படி 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27-ம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெற்ற நிலையில், இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்படி, இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 31 தொகுதிகளுக்கான தேர்தலில் மொத்தம் 205 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில், உளுபிரியா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேரந்த மூத்த தலைவர் கவுதம் கோஷ் வீட்டில் மூன்று மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றப்பட்டதை அடுத்து தேர்தல் அதிகாரி ஒருவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வெளிப்படையா விசாரணை தேவை என அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது. மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சுஜதா, மீது பாஜக கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக அக்கட்சியினர் புகார் தெரிவித்தனர். இப்படி பரபரப்பாக மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குப்பதிவின் மாலை 7 மணி நிலவரப்படி இதுவரை 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.