முதலமைச்சர்தான் பல்கலைக்கழக வேந்தர் – மசோதா நிறைவேற்றம்

மேற்கு வங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதில் முதலமைச்சர் இருப்பார் என்பதற்கான மசோதா, அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளுநர் ஜெக்தீப் தங்கருக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே நீண்ட காலமாக கடும்…

மேற்கு வங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதில் முதலமைச்சர் இருப்பார் என்பதற்கான மசோதா, அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆளுநர் ஜெக்தீப் தங்கருக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே நீண்ட காலமாக கடும் மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில், ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை குறைக்கும் விதமாக, மேற்கு வங்க அரசு நடத்தம் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதில், முதலமைச்சர் இருப்பார் என்பதற்கான மசோதா, அம்மாநில சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு சட்டப்பேரவையில் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், மொத்தமுள்ள 294 உறுப்பினர்களில் 182 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 40 பேர் மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

  • நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்துப் பேசிய மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு, ஆளுநருக்கு இருக்கும் அந்த அதிகாரத்தை முதலமைச்சர் எடுத்துக்கொள்வதில் தவறில்லை என்றார்.

மத்திய பல்கலைக்கழகமான விஸ்வ பாரதியின் வேந்தராக பிரதமர் இருக்கும்போது, மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருப்பதில் என்ன தவறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே, இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறி ஆளுநர் ஜக்தீப் தங்கர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்த, ஆளுநருக்கு எதிரான இந்த மசோதா, ஒப்புதலுக்காக ஆளுநருக்கே அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.