உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் விளையாட்டு வீரரான நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி ரஷ்ய வீரரான டேனியல் மேட்வதேவ் முதல் இடத்தை பிடித்தார்.
நெதர்லாந்தில் நேற்று நடைபெற்று முடிந்த ரோஸ்மெலன் கிராஸ் கோர்ட் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்ததை அடுத்து 7950 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு டேனியல் மேட்வதேவ் முன்னேறியுள்ளார்.
19 ஆண்டுகளுக்கு பின் முதல் மூன்று இடங்களில் புதிய வீரர்களின் முன்னேற்றம் இதுவே முதல்முறையாக நிகழ்ந்துள்ளது. நடப்பாண்டு பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சை காலிறுதியில் வீழ்த்தினார் ஸ்பெயின் சூப்பர் ஸ்டார் நடால். எனவே 2000 கிராண்ட் ஸ்லாம் புள்ளிகளை தவர விட்டதன் மூலம், ஜோகோவிச் மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளார்.
மேலும் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வர்வ்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளார். ஸ்பெயின் சூப்பர் ஸ்டார் ரபேல் நடால் 5 வது இடத்தில் இருந்து 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தரவரிசை பட்டியலின் அடிப்படையில் பார்க்கும் பொழுது, டேனியல் மேட்வதேவ் 7950 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அலெக்சாண்டர் ஸ்வர்வ்ஸ் 7075 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நோவக் ஜோகோவிச் 6770 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், ரபேல் நடால் 6525 புள்ளிகளும், கேஸ்பர் ரூட் 5050 புள்ளிகளுடன் 5 வது இடத்திலும் உள்ளனர்.








