முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம் லைப் ஸ்டைல் Health Instagram News

சன்கிளாஸ் அணிவதன் முக்கியத்துவம்; கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் கண்கண்ணாடிகள்!

உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு சன்கிளாஸ்கள் அணிவது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரீன்லாந்து, லாப்ரடோர், கியூபெக், நுனாவுட் மற்றும் வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் அலாஸ்கா பகுதிகளில் உள்ள பழங்குடியினர் கண்களைக் குருட்டுத்தன்மையிலிருந்து பாதுகாக்கக் கருப்பு நிற கண் கண்ணாடிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இது அவர்களின் கண்களைப் பனியிலிருந்து பிரதிபத்திக்கும் வெளிச்சத்திலிருந்து பாதுகாத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது சந்தையில் பல நிறங்கள் மற்றும் வடிவங்களுடன், சன்கிளாஸ்கள் எங்கும் நிறைந்த ஃபேஷன் உலகை ஆக்கிரமித்து வருகின்றன. சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதா கதிர்வீச்சின் தீங்கு விளைவிக்கும் சிறு தூசுக்களினால் கண்களுக்கு ஏற்படும் விளைவுகளிலிருந்து சன்கிளாஸ்கள் கண்ணைப் பாதுகாக்கின்றன.

நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பவர்கள், குறிப்பாக மலைகளில் வசிப்பவர்கள் மற்றும் விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் விளையாட்டு போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்குப் பல கண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சன்கிளாஸ்கள் அணிவது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், ஆரம்பகால கண்புரை, கார்னியல் சிதைவு, உலர் கண்கள், விழித்திரை பாதிப்பு மற்றும் கண்களைச் சுற்றியுள்ள தோல் புற்றுநோய் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், லென்ஸ் வழியாக செல்லும் சில ஒளியை வடிகட்டி கண்களுக்கு செல்லாமல் தடுக்கிறது. சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களைத் தடுப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

சன்கிளாஸ்கள் அணிவதன் நன்மைகள்:

  • இது வலுவான வெளிச்சம் உள்ளே செல்வதைத் தடுக்கிறது, இதனால் தலைவலி மற்றும் கண்களில் நீர் வடிதல் ஆகியவற்றைத் தடுக்கிறது.
  • இது மேகமூட்டமான காலநிலையில் கூட புற ஊதா கதிர்கள் கண்ணுக்குள் செல்வதைத் தடுக்கிறது, விழித்திரை சேதம், கண்புரை மற்றும் கிளௌகோமாவை தடுக்கிறது.
  • சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருக்கும்போது கண்களைச் சுற்றியுள்ள தோல்களில் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.
  • மாசு மற்றும் தூசி நேரடியாகக் கண்களில் படுவதைத் தடுக்கிறது. மேலும், கண்களின் மேற்பரப்பு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை குறைத்து வழங்கியது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி

Halley Karthik

மிஸ் யுனிவர்ஸ் 2021: யார் இந்த ஹர்னாஸ் சாந்து?

EZHILARASAN D

சட்டத்திற்கு புறம்பாக சச்சின் சொத்து குவிப்பு?

G SaravanaKumar