அனைத்துப் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு அரசை வலியுறுத்துவோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பெரியாரின் கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்றிய திமுக அரசு, சமூக நீதிக்கான அரசு என்று புகழாரம் சூட்டினார்.
இதனைத் தொடர்ந்து பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு அரசை வலியுறுத்துவோம் என்று தெரிவித்த அவர், 25 சாதிகளின் பெயர்கள், ஒன்றிய அரசின் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் இது தொடர்பான கோரிக்கையை முதலமைச்சரிடம் முன்வைத்துள்ளதாகவும் திருமாவளவன் கூறினார்.
கோடநாடு விவகாரத்தில் தொடர்பில்லை என்றால் ஓபிஎஸ், இபிஎஸ் பதறத் தேவையில் லை என்றும் அரசு விசாரிக்க நினைத்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது இருவரின் கடமை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.







