முக்கியச் செய்திகள் இந்தியா

முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக 4 வது மனைவி புகார்: முன்னாள் அமைச்சர் கைது

முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக, நான்காவது மனைவி கொடுத்த புகாரை அடுத்து, முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்தவர், சவுத்ரி பஷீர். மூன்று முறை கட்சி மாறியுள்ள இவர் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சவுத்ரி பஷீரின் நான்காவது மனைவி நக்மா, சமூக வலைதளத்தில் சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், பஷீருக்கு ஏற்கனவே என்னோடு சேர்த்து ஐந்து மனைவிகள் உள்ளனர். நான் நான்கா வது மனைவி. கடந்த 2012 ஆம் ஆண்டு பஷீரை திருமணம் செய்தேன். அவர், ஆறாவது திருமணம் செய்ய இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரிடம் விசாரித்தபோது, அடித்து துன்புறுத் தினார். முத்தலாக் வாயிலாக என்னை விவாகரத்து செய்து வீட்டை விட்டு துரத்தினார். அவரும் அவர் சகோதரிகளும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை கொடுமைப் படுத்தினர். போலீசில் புகார் கொடுத்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இஸ்லாமிய பெண்கள் திருமணப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அவர் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற அறுவுறுத்தலின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Advertisement:
SHARE

Related posts

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம்: சீமான்!

Halley karthi

தமிழ்நாட்டில் புதிதாக 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Saravana Kumar

மமதா பானர்ஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ள பிஜேபி

Saravana Kumar