முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்துக்கு ஜீயர் கண்டனம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கோரிக்கையை நிறைவேற்றி பணி நியமன ஆணை வழங்கியது. இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ள திமுக அரசுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுத் தெரிவித்து வருகின் றனர். சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சடகோப ராமானுஜ ஜீயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள வீடியோவில், தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இந்துக் கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும் எனவும் நடைமுறைகளை மாற்றக் கூடாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் இந்த ஆணையை தமிழக அரசு திரும்ப பெறும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Advertisement:
SHARE

Related posts

நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு: அமித்ஷா அஞ்சலி!

பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கும், மாநில அரசிற்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்

Halley Karthik

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி பயணம்

Halley Karthik