பாஜகவுடனான கூட்டணி…. மதுரையில் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

பாஜகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், அவர்களாக முறித்துக் கொள்ளும் வரை நாங்கள் அந்த கூட்டணியில் தொடர்கிறோம் என்று பதிலளித்துள்ளார். சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள்…

பாஜகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், அவர்களாக முறித்துக் கொள்ளும் வரை நாங்கள் அந்த கூட்டணியில் தொடர்கிறோம் என்று பதிலளித்துள்ளார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஓபிஎஸ் அளித்த பதில்களாவது:

மணிப்பூர் வீடியோ வெளியான விவகாரம் குறித்த கேள்விக்கு, பதிலளித்த ஓபிஎஸ், மணிப்பூரில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், இரண்டு மாதங்களுக்கு முன் இரண்டு பெண்கள் கொடூரமாக நடத்தப்பட்டது போன்று இனி நடக்காமல் தடுப்பது அந்த மாநில அரசின் கடமை மற்றும் இந்திய அரசின் கடமை எனக் குறிப்பிட்டார்.

மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன் எங்கிருந்தாலும் வாழ்க எனக் கூறினார்.

தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அவர்களாக முறித்துக் கொள்ளும் வரை நாங்கள் அந்த கூட்டணியில் தொடர்கிறோம் என்று கூறினார்.

திமுக அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதை எதிர் கொண்டு வெற்றி அடைய வேண்டியது அவர்களின் பொறுப்பு என்று தெரிவித்தார். அதோடு

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று ஓபிஎஸ் பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.