அமெரிக்காவில் ‘ப்ராஜெக்ட் கே’ படக்குழுவுடன் கமல்ஹாசன்!

அமெரிக்காவில் நடைபெற்ற காமிக்-கான் நிகழ்வில் ‘ப்ராஜெக்ட் கே’ படக்குழுவுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியுள்ள ப்ராஜெக்ட் கே, திரைப்படம் தெலுங்கு திரையுலகில்…

அமெரிக்காவில் நடைபெற்ற காமிக்-கான் நிகழ்வில் ‘ப்ராஜெக்ட் கே’ படக்குழுவுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியுள்ள ப்ராஜெக்ட் கே, திரைப்படம் தெலுங்கு திரையுலகில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் தற்போதைய பான்-இந்திய ஸ்டாராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் பாகுபலி புகழ் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதையின் நாயகியாக தோன்றி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பாளர்கள் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் சான் டியாகோவில் இன்று நடைபெற்ற காமிக்-கான் நிகழ்வில் சூப்பர் மேன், பேட் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் வேடம் அணிந்து ரசிகர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பல திரைப்படங்களுக்கான விளம்பரம் மற்றும் ப்ரோமோஷன்கள் வெளியிடப்பட்டன.

இந்த காமிக்-கான் நிகழ்ச்சியில் கமல்ஹாசன், பிரபாஸ் உள்ளிட்ட ’புராஜெக்ட்  கே’ படக்குழுவினர் கலந்துகொண்டனர். கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் படத்தின் பெயரையும், க்ளிம்ப்ஸ் காட்சியையும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்றும் மொத்தம் 25 நாட்கள் கால்ஷீட்டுக்கு அவர் 130 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறவிருக்கிறார் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.