எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – வட்டம் – கிளை – பாக இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டோம்.
சோபா மாடல் ஆளுங்கட்சியின் குதிரை பேர அரசியலால் திணிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அன்பு சகோதரர் பரந்தாமன் அவர்களை வெற்றி பெற செய்திட அயராது உழைக்க வேண்டும் உரையாற்றினோம்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு – மின்வெட்டு – விலைவாசி உயர்வு என அனைத்து வகையிலும் தமிழ்நாட்டு மக்களை வதைக்கும் டம்மி முதலமைச்சருக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பாடம் புகட்டும் வகையில் தேர்தல் பணிகளை அமைத்துக்கொள்வோம் என ஆலோசனைகளை வழங்கினோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




