முக்கியச் செய்திகள் தமிழகம்

மீண்டும் வேகமெடுத்துள்ள கொரோனா பரவல்; மூக்கு வழியாக செலுத்தும் மருத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

உலகில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் மருத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து இந்தியாவிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சர்வதேச விமானநிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் கொரோன நிலவரம் குறித்து ஆராய பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது கிறிஸ்துமஸ், ஆங்கில வருடபிறப்பு உள்ளிட்ட பல பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. எனவே பண்டிகை காலங்களில் மக்கள் என்ன மாதிரியான கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டாக தெரிகிறது.

இந்நிலையில், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் எனவும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் திட்டத்தில் மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இன்று முதல் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டராக செயல்படவுள்ள மூக்குவழி தடுப்பு மருந்து முதற்கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பந்தவ்கர் தேசிய பூங்காவில் காட்டுத்தீ!

எல்.ரேணுகாதேவி

சென்னை கண்ணகி நகரில் கூடுதல் பள்ளிகள் கட்டித்தரப்படும் – திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ்

Jeba Arul Robinson

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை வரும் 28ம் தேதி திறப்பு!

EZHILARASAN D